Header

Sri Lanka Army

Defender of the Nation

19th July 2021 10:30:13 Hours

12 படைப்பிரிவினரால் ஹம்பாத்தோட்டை விகாரையில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் படைகளினால் ஹம்பாந்தோட்டை கட்டுவெவவிலுள்ள சாசனாலோக விகாரையில் ஜூலை 15 முதல் 22 வரை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நீண்ட காலமாக மேற்படி விகாரை வளாகம் தூய்மையாக்கப்படாமலும் கவனிப்பாரற்ற நிலையிலும் காணப்பட்டதால் படையினர் குறித்த விகாரை வளாகத்திற்கு வர்ணம் பூசி அழகு படுத்தினர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அறிவுரைக்கமையவும் 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்படி செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.