Header

Sri Lanka Army

Defender of the Nation

19th July 2021 15:52:28 Hours

இயந்திரவியல் காலாட் படையினரின் குடும்பத்தினருக்கான தியதலாவையில் புதிய விடுமுறை விடுதி

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இயந்திரவியல் காலாட் படைக்குச் சொந்தமானதாக “மெக் பிரீஸ்” என்னும் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விடுமுறை விடுதி இயந்திரவியல் காலாட் படைணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் சேன வடுகே அவர்களிடம் சனிக்கிழமை (17) கையளிக்கப்பட்டது.

இயந்திரவிய காலாட்படையின் உறுப்பினர்களுக்கான விடுமுறை விடுதி நீண்ட கால தேவையாக காணப்பட்டதுடன், குறித்த விடுதி 6 சொகுசு அறைகளுடன் சகல நவீன தளபாட அம்சங்களை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேற்படி முழு கட்டுமானமும் இயந்திரவியல் காலாட்படையின் மனித வளம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி நிறைவு செய்யப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கதாகும்.

தியதலாவையிலுள்ள இயந்திரவியற் காலாட் படையின் நீண்டகால அவசியத்தை பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி விடுமுறை விடுதியை திறந்து வைப்பதற்காக இயந்திரவியற் காலாட் படையின் படைத்தளபதியினால் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த இடத்திற்கு வருகை தந்த தளபதியினை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, மேஜர் ஜெனரல் சேனா வடுகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளால் “முகமூடி” நடனக் கலைஞர்களின் கலை நிகழ்வுகளுக்கு மத்தியில் வரவேற்றனர்.

அதனையடுத்து மேற்படி நிர்மாண பணிகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய பெயர் பலகை பிரதம விருந்தினரால் திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய கட்டிடத்தை திறந்து வைத்த தளபதி அதன் சுற்றுபுற வளாங்களையும் மேற்பார்வை செய்தார். பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட இயந்திரவியல் காலாட்படையின் குடும்பங்களின் மகன் மற்றும் மகள்மார்களுடனும் தளபதி கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் இயந்திரவியற் காலாட்படை சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நெலும் வடுகே, இயந்திரவியற் காலாட்படை சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இயந்திரவியற் காலாட்படை பேரவை உறுப்பினர்கள் உள்ளடங்களாக இயந்திரவியற் காலாட்படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும், அதிகாரிகளும் சிப்பாய்களும் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.