Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2021 10:00:09 Hours

கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளால் இடைநிலை சிகிச்சை மையங்களிலுள்ள பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கி வைப்பு

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவரும் அதன் புதிய அலுவலக பொறுப்பாளர்களும் வியாழக்கிழமை (15) அக்மீமனா ருஹுனு தேசிய தேசிய கல்வி நிறுவகத்தில் நிறுவப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையம் மற்றும் இடைநிலை சிகிச்கைலையத்திற்கு சென்று இரு இடங்களிலும் சிகிச்சை பெரும் குழந்தைகளுக்கு உபகரணங்கள் மற்றும் விசேட பரிசு பொருட்களை வழங்கி வைத்தனர்.

மேற்படி பொருட்களில் 20 இரும்பு கட்டில்கள், 20 மீற்றர் கட்டில் விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள், 20 கொசு வலைகள் ஆகியன உள்ளடங்கியிருந்தன.

மேற்படி நன்கொடைத் திட்டம் 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்களின் வழிகாட்டல் மற்றும் 613 வது பிரிகேட் தளபதி உபுல் கொடிதுவக்கு மற்றும் 14 (தொ) கெமுனு ஹேவா படையின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது.