Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2021 11:00:02 Hours

65 வது படைப்பிரிவு தளபதி மரியாதை நிமித்தமான விஜயம்

ஓய்பெறவிருக்கும் 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திஸாநாயக்க தனது கடமைகளை கைவிடுவதற்கு முன்பாக கட்டுப்பாட்டு அலகுகளுக்கு 11 ஜூலை 2021 அன்று மரியாதை நிமித்தமான விஜயமொன்றை மேற்கொண்டார்.

அதற்கமைய முதலவாவது விஜயத்தை 652 வது பிரிகேடிற்கு மேற்கொண்டிருந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், படையினருக்கான அவரது உரையினை தொடர்ந்து 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அதனையடுத்து 651 வது பிரிகேடிக்குக்கு விஜயம் மேற்கொண்ட தளபதிக்கு 19வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாவ வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை தொடர்ந்து தனது விருகையின் நினைவாக பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.

இறுதியாக, 653 பிரிகேடுக்கு விஜயம் செய்த தளபதி 24வது கஜபா படையணியின் கேட்போர் கூடத்தில் படையினருடன் கலந்துரையாடிதுடன் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரம் நிறைவடைந்த பின்னர் நிகழ்வு இறுதி கட்டத்தை அடைந்தது.