15th July 2021 19:00:13 Hours
இன்று காலை (17) இலங்கையில் 1,517 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 71 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 1,446 நபர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள். அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபடியாக கொழும்பு மாவட்டத்தில் 252 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், கம்பஹா மாவட்டத்தில் 232 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 153 பேரும் பதிவாகியுள்ளனர். மீதி 809 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவுவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை (17) வரை இலங்கையில் மொத்தம் 282,059 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 173,544 பேர் புத்தாண்டுக்குப் பின்னர் இணங்காணப்பட்டவர்கள்.
இன்று (17) அதிகாலை 0600 மணி வரை 918 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று (17) ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 71 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,909 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று (17) அதிகாலை 0600 மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) 221 பேர் 22 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நிறைவின் பின் வீடு திரும்பினர்.
ஜூலை (15) ம் திகதி வரை இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆகும் அவர்களில் 18 பெண்களும் 23 ஆண்களும் உள்ளடங்குவர்.
இன்று (17) காலை முதல் கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட் மஹிபிட்டிய கிராம சேவகர் பிரிவின் மாதயியாவ கம, இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல பொலிஸ் பிரிவின் மாலுவாகல தோட்டத்தின் மேல் பிரிவு , அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 3 ஆம் பிரிவு, கண்டி மாவட்டத்தின் கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுஹும்பொல மேற்கு கிராம சேவகர் பிரிவின் விகாரை ஒழுங்கை விகாரை மாவத்தை கப்பரபள்ளி வீதி மற்றும் வெலமெதபாரகம மற்றும் சுதுஹும்பல கிழக்கு கிராம சேவகர் பிரிவின் விகாரை வீதி, விகாரை மாவத்தை கப்பரபள்ளி வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.