15th July 2021 17:00:07 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 122 வது பிரிகேட்டின் 3 வது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் 23 வது கஜபா படையணியினர் இணைந்து வியாழக்கிழமை (15) கதிர்காமம் வெடஹிடிகந்த பகுதியில் சிரமாதான பணிகளை முன்னெடுத்தனர்.
12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக மற்றும் 11வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சாணக்க பல்லேகும்புர ஆகியோரின் அறிவுறுத்தலுக்மைவாக 23 வது கஜபா படையணி மற்றும் 3 வது தேசிய பாதுகாப்பு படையணிகளின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.