15th July 2021 16:00:33 Hours
தொடர்ச்சியாக நினைவு கூறப்படும் போர் வீரர்களில் ஒருவரான “ஹசலக போர் வீரர்” கோப்ரல் காமினி குலரத்ன அவர்களின் 30 வது நினைவு கூறல் தினத்தை முன்னிட்டு நிகழ்வு ஜூலை 14, 1991 அன்று ஆணையிறவில் இடம்பெற்ற தாக்குதலின் போதான அவருடைய உயர்வான தியாகங்கள் புதன்கிழமை (14) நினைவு கூறப்பட்டன.
66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க மற்றும் 662 வது பிரிகேட் தளபதி கேணல் சமிந்த லியனகே ஆகியோருடைய வழிகாட்டலுக்கமைய இந்நிகழ்வு 662 வது பிரிகேடினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட எளிமையாகவும் கௌரவமான முறையிலும் ஆணையிறவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மறைந்த சிங்கப்படை வீரரின் படைப்பிரிவை பிரநிநிதித்துவப்படுத்தும் வகையில் நிகழ்வின் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார கலந்துகொண்டார்.
உயிர் நீத்த பின்னர் மிக உயர்வான பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட ஹசலக போர் வீரருக்கு பரம வீர விபூசன பதக்கம் வழங்கப்பட்டிருந்ததுடன், 6 வது இலங்கை சிங்கப்படையை சேர்ந்த அவர் பயங்கரவாதிகள் இராணுவ தளங்களுக்குள் உள்வதை முறியடிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.
நினைவுத் தூபியின் முன்பாக தீபம் ஏற்றி பிரதம விருந்தினரால் மறைந்த போர் வீரருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது சிலைக்கும் மலர் மாலை சூட்டி அஞ்சலி செய்தார்.
அதனை தொடர்ந்து 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க, 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் தீபால் புஸ்ஸெல்ல , 57 படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுடன் ஏனைய பதவி அணியினரும் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவுற்றது. மேற்படி நிகழ்வு கொவிட் - 19 ஒழுக்குவிதிகளை பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.