Header

Sri Lanka Army

Defender of the Nation

15th July 2021 14:03:40 Hours

காரைநகர் குடும்பத்தினருக்கும் படையினரால் நிர்மாணிக்கப்படும் புதிய வீடு

513 வது பிரிகேட் படையினரின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (13) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களினால் மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் யாழ். காரைநகரில் வசிக்கும் திரு தம்பிராசா மணியழகன் என்பவரின் குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பை சேர்ந்த திரு மோகன் சங்கர் என்பவரால் மேற்படி குடும்பத்தின் வறுமை நிலைமைகளை கருத்திற் கொண்டு வழங்கப்பட்ட நன்கொடையை கொண்டு மேற்படி நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களால் நிர்மாண பணிகளுக்கு அவசியமான மனித வளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துவம் வழங்கப்படவுள்ளதுடன், இந்த நிர்மாணப்பணிகள் 513 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றவுள்ளது.

புதிய வீட்டின் பயனாளிகளுக்கு அவசியமான நிவாரண பொருட்களும் பிள்ளைகளுக்கு அவசியமான கற்றல் உபகரணங்களும் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல, 511,512,513 மற்றும் 515 வது பிரிகேடுகளின் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், ஏனைய சிப்பாய்களும் அடிக்கல் நாட்டும் விழாவில் சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றும் வகையில் கலந்துகொண்டனர்.