Header

Sri Lanka Army

Defender of the Nation

12th July 2021 17:40:14 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவு மகளிர் குழுவினர் 37 வது ஆண்டு பூர்த்தி விழாவில் தளபதியுடன்

இராணுவத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 37 வது ஆண்டு தினமான இன்று (12) அதன் குழுவினர் தங்களது நலன்புரித் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்நிகழ்வின் குறித்த அமைப்பின் நினைவுச் சுவடுகளை பிரதிபலிக்கும் சித்திரங்கள் அடங்கிய சஞ்சிகை ஒன்று வெளியிடப்பட்டதுடன், 10 மாணவர்களுக்கான மடிக்கணினிகளை வழங்கி வைத்தல், மற்றும் முல்லேரியா மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் 150 நோயாளிகளுக்கு மதிய உணவு விருந்து வழங்கள் போன்ற நிகழ்வுகள் தற்கால சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி நிகழ்ச்சி நிரலின் சிறப்பம்சமாக “மெஹெவரக அசிரிய” (சேவையின் மகிமை) என்ற நினைவு சஞ்சிகையின் முதல் பிரதி பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் 2019 ஆம் ஆண்டில் மேற்படி பதவியை பெற்றுக்கொண்டதுடன், அதற்காக அயராத அர்ப்பணிப்புடன் உழைத்தார். அவருடன் சேவை வனிதையர் அமைப்பின் பிரதி தலைவர் திருமதி சியாமலா பண்டார, சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி சுமாலி மாதொல,சேவை வனிதையர் அமைப்பின் உதவிச் செயலாளர் திருமதி சியாமினி கொடுவேகொட, சேவை வனிதையர் பிரிவின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி தீபா ஹந்துன்முல்ல,சேவை வனிதையர் பிரிவின் உதவி பிரதி மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி நெலும் வடுகே மற்றும் திருமதி ரத்னமாலி பிரேமலால் ஆகியோரால் “மெஹெவரக அசிரிய” (சேவையின் மகிமை) என்ற நினைவு சஞ்சிகையின் முதல் பிரதி பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த சஞ்சிகையபனது திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடைய வழிகாட்டலின் கீழ் இராணுவ சேவை வனிதையர் அமைப்பு இதுவரையில் முன்னெடுத்துள்ள நலன்புரித் திட்டங்கள் தொடர்பிலான சுருக்கமான பதிவுகளை கொண்டுள்ளது.

இதன்போது இராணுவ சேவை வனிதையர் அமைப்பின் 37 வது ஆண்டு தினத்தின் போது, ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அவ்வமைப்பிற்கு தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் , மேற்படி அமைப்பின் மகளிர் குழுவினர் பல வருடங்களாக சிறந்த போர்வீரர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைப்பில் உள்ள சிவில் ஊழியர்களின் நலனுக்காக வனிதையர்கள் முன்னெடுத்துவரும் சிறந்த சேவைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவானது தனது வரம்புகளுக்கு அப்பால் சென்று இராணுவத்தின் பணிகளுக்கு பக்கபலமாக இருந்து வருவதையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அண்மையில் இராணுவ சேவை வனிதையர் அமைப்பினால் சீதுவையில் குறுகிய காலத்தில் நிறுவப்பட்ட கொவிட் - 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இடைநிலை சிகிச்சை மையத்தின் கட்டமைப்பு பணிகள் சாதனையாகும் என்றும் இவ்வாறான பணிகளை மேலும் விரிவுப்படுத்துவது அவசியமெனவும் இராணுவ தளபதி தனது சுருக்கமான உரையின் போது சட்டிக்காட்டினார்.

கொழும்பில் உள்ள மிட்லேண்ட் பிரதேசத்தில் நடைபெற்று வரும் ஹோட்டல் மற்றும் வரவேற்பு மண்டப கட்டுமானத் திட்டத்தின் நிலை குறித்தும் இராணுவத் தளபதி கேட்டறிந்துகொண்டார். மேலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கான நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் நம்பிக்கையை தெரிவித்தார். அத்தோடு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் பணிகளை விரிவுப்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் தொடர்பிலான மதிப்பாய்வு ஒன்றையும் கோரினார்.

எதிர்கால உபாயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய இராணுவ வீரர்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துடன் எதிர்காலத்தில் சேவை வனிதையர் பிரிவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிரிகேடியர் ஒருங்கிணைப்பு துஷார பாலசூரிய, கேணல் நிர்வாகம் கேணல் அருண விஜேகோன் மற்றும் பதவி நிலை அதிகாரி1 (திட்டம்) லெப்டினன் கேணல் ஐடிஎஸ் தர்மரத்ன, ஆகியோரும் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர்.