09th July 2021 21:46:19 Hours
புதிதாக நியமனம் பெற்றதையடுத்து முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய தலைமையகத்தின் கட்டளை அலகுகளான 64, 68 மற்றும் 59 வது பிரிவுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.
படைப்பிரிவுக்கு சனிக்கிழமை (26) வருகை தந்த தளபதிக்கு 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன வரவேற்பளித்ததுடன், படையினரின் பணிகள் தொடர்பிலும் விளக்கமளித்தார். அதனைடுத்து தளபதி முதியன்கட்டு மற்றும் வஸ்திபுர பயிற்சி பாடசாலைகளைகளுக்கும் விஜயம் செய்தார்.
பின்னர். அவர் செவ்வாய்க்கிழமை (29) 68 வது பிரிவுக்கு விஜயம் செய்திருந்ததோடு, 68 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார அவர்களால் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது படையினரின் தங்குமிட வசதி, வீதித் தடை பணிகள், முக்கிய தளங்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவான கடமைகள் என்பன தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இறுதியாக, 59 வது படைப்பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை (4) விஜயம் செய்த தளபதிக்கு 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பி.டி.சூரியபண்டார அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டதுடன், தளபதி படைப்பிரிவின் வசதிகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.
அதனையடுத்து முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார். பின்னர் அனைத்து நிலைகளுக்குமான உரையொன்றை நிகழ்த்திய அவர், குழு புகைப்படும் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்