Header

Sri Lanka Army

Defender of the Nation

13th July 2021 19:12:55 Hours

11வது படைப்பிரிவினரின் ஒருங்கிணைப்பில் அநாதரவானவர்களுக்கு நிவாரண பொதிகள் விநியோகம்

குண்டசாலை பகுதியில் உள்ள 150 ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை (11) குண்டசாலை மஹா விகாரை வளாகத்திற்கு அழைக்கப்பட்டு 11 வது படைப்பிரிவின் சிப்பாய்களால் அவர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தொற்று நோய் பரவல் காலத்தில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் மக்களுக்கு உதவுவதற்கான நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளை கொண்டு 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியகனே அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் பொதிகளை விநியோகிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி பொதிகளில் அரிசி, பருப்பு, பிஸ்கட், டின் மீன், பால் மா போன்றவை அடங்கியிருப்பதுடன். 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியகனே சிரேஸ்ட அதிகாரிகள் பலருடன் மேற்படி நிகழ்வில் பங்கெடுத்திருந்தார்.

சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாக பின்பற்றி இந்நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.