13th July 2021 18:50:51 Hours
நிக்கவெவவில் அமைந்துள்ள எயார் மொகையில் பயிற்சி கல்லூரியில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பாடநெறி எண்: 23 இன் படையினரால் ஜூலை 7-9 திகதிகளில் ஹிங்குரங்கொட விமானப்படை தளத்தில் கயிறுகளூடாக ஹெலிகொப்டர்களில் ஏறுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, பயிற்சி கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டு பயிற்சியாளர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததுடன், பயிற்சியாளர்களை மேற்பார்வை செய்த பின்னர் பாடநெறியின் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
தளபதியின் வருகையின் போது இடம்பெற்ற நிகழ்வுகளில் பயிற்சி கல்லூரியின் அதிகாரிகளும் ஏனைய பதவி அணியினரும் கலந்துகொண்டனர்.