09th July 2021 21:51:02 Hours
4 வது கெமுனு ஹேவா படையினர் மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்கப்படையணியின் படையினர் கூட்டாக இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண், சித்தாண்டி, உன்னிச்சை மற்றும் வெல்லாவளி பகுதிகளில் வசிக்கும் 25 வறிய குடும்பங்களுக்கு அவசியமான 500 கோழிக் குஞ்சுகளை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வு 231 வதஞ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி அவர்களின் அறிவுரைக்கமைய சனிக்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டது.
நன்கொடையாளர்களின் தாராளமான நிதியுதவியுடன் இப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வறையறுக்கப்பட்ட வைஆர்எஸ்.கட்டிட நிர்மாண நிறுவனத்தின் திரு ஜீஎஸ் யோகநாத் மற்றும் வறையறுக்கப்பட்ட புரொஜெக்ட் புரொப்படி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திரு மில்ரோ செனவிரத்ன ஆகியோரால் மேற்படி திட்டத்திற்கான நன்கொடைகள் வழங்கப்பட்டிருந்தன.
231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி பயனாளிகளின் வீட்டு வசதிகளை பார்வையிட்ட பின்னர் கோழிக் குஞ்சுகளை ஒப்படைத்தார்.