10th July 2021 17:29:49 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதன்கிழமை (7) பனாகொடையில் உள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திலிருந்து விடைபெற்றுச் சென்றார். அங்கு அவருக்கு பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டு பிரியவிடை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது 12 வது கஜபா படையணின் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திலுள்ள 14,61 வது படைப்பிரிவுகளின் படைத் தளபதிகள் மற்றும் பிரிகேட் தளபதிகள் , கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தளபதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
பின்னர் அனைத்து நிலையினருக்குமான உரையொன்றினை நிகழ்த்திய மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது பதவி காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.