Header

Sri Lanka Army

Defender of the Nation

13th July 2021 22:58:14 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 37 வது ஆண்டு பூர்த்தியையிட்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் பரிசளிப்பு

இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் அவ்வமைப்பின் 37 வது ஆண்டு பூர்த்தி தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் 12 ஜூலை 2021 அன்று இராணுவ மற்றும் சிவில் சேவை ஊழியர்களின் 10 பிள்ளைகளுக்கு மடிக்கணினிகளை அன்பளிப்புச் செய்தனர்.

அதனை குறிக்கும் அம்சமாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் இணைந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் நிர்வாக உறுப்பினர்களால் ஒரு மாணவருக்கு மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டது. ஏனைய 9 மடிக்கணினிகளும் சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து படையணி மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

'மெஹெரகா ஆசிரிய' சஞ்சிகையின் முதல் பிரதிகளை இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் வைத்து அவரிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதன் ஏனைய பிரதிகள் இராணுவ தலைமையகத்தின் ஏனைய பணிப்பகங்கள் மற்றும் பிரிவுகளுக்கு அனுப்பட உள்ளது. அதேபோல் மேற்படி சஞ்சிகையின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படை தலைமையகம், இலங்கை விமானப் படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், சிவில் பாதுகாப்பு படைத் தலைமையகம், பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் மற்றும் படைப்பிரிவுகளுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய ஸ்ரீ ஜயவர்த்தனபுரவிலுள்ள இராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஏனைய பதவி அணியினருக்கும் சிவில் ஊழியர்களுக்கும் (12) மதிய நேர சிறப்பு விருந்துபசாரம் ஒன்றும் வழங்கப்பட்டது.

திங்கள் (12) நண்பகல் வேளையில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரதிநிதிகளால் 37 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு முல்லேரியாவிலுள்ள மனநல வைத்தியசாலையில் 5 மற்றும் 6 ஆம் வார்டுகளில் சிகிச்சை பெரும் சுமார் 150 நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவானது போரில் உயிர் நீத்த/ காணாமல் போன வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்த வீரர்களுக்கான உந்து சக்தியாக இருந்து வருவதோடு, தற்போது சேவையிலிருக்கும் இராணுவ நல்வாழ்வையும் நலனையும் கவனிக்கும் மற்றுமொரு ஒரு இணை சக்தியாகவும் செயற்பட்டு வருகின்ற நிலையில் இராணுவத்தின் போர் வீரர்களுக்காக சேவையாற்றும் சிரேஸ்ட அதிகாரிகளின் துணைவர்களால் நடத்தப்படும் நலன்புரி அமைப்பான சேவை வனிதையர் அமைப்புக்கு (ஜூலை 12) திங்களன்று 37 வயதை எட்டியது.

1982 ஆம் ஆண்டின் 10 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியூடாக இராணுவ சேவை வனிதையர் பிரிவு 1984 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி நிறுவப்பட்டு தற்பொழுது 37 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மேற்படி அமைப்பின் படையணி பிரிவு 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு இன்றுவரை பணியாற்றி வருகிறது. அனைத்து இராணுவத்தினரின் குடும்பங்கள், பிள்ளைகள் மற்றும் போரில் உயிர் நீத்த வீழ்ந்த மற்றும் காயமடைந்த தேசபற்று கொண்ட போர் வீர வீராங்கனைகளின் "இரண்டாவது தாய்" என்ற பாத்திரமாக விளங்கும் சேவை வனிதையர் அமைப்பு அவர்களுக்கான வீட்டுவசதி, குழந்தைகளுக்கு உதவித்தொகை, ஊன்றுகோல், செயற்கை கால்கள் வழங்குவதன் மூலம் இராணுவத்திற்கு பலம் தரும் தூணாக நிற்கிறது. போர் நடவடிக்கைகளின் போது காயமடைந்தவர்களுக்கு சக்கர நாற்காலிகள், போர்வீரர்களின் குழந்தைகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான முன் பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நடத்துதல், வீடுக ளைநிர்மாணிக்க அவசியமான நிதி உதவி, வைத்திய பராமரிப்பு நிலையங்கள், இயற்கை பேரழிவுகளின் போது கைக்கொடுத்தல் மற்றும் தைரியமூட்டல் காயமடைந்த போர்வீரர்களை அடிப்படை தேவைகள், மற்றும் நல்வாழ்வுக்கான ஆன்மீக திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களில் கைகொடுத்து வருகிறது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் யாப்புக்கமைய அவ்வமைப்பின் உறுப்பினராக சேவையாற்ற இராணுவ அதிகாரிகளின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் மகளிர் அதிகாரிகளை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். செயற்குழு தலைவர், பிரதி தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் பொது மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோரைக் கொண்டதாக இவ்வமைப்பு அவர்களது நோக்கங்களின் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது.