10th July 2021 17:34:29 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 வது படைப்பிரிவின் 11 வது படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ள மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, கொழும்பு 2 இல் அமைந்துள்ள அப்படைப்பிரிவு தலைமையகத்தில் புதன்கிழமை (7) மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முன்பாக குறித்த பதவியை வகித்த மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா தற்போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய தளபதி தலைமையகத்திற்கு வருகை தந்ததையடுத்து அவருக்கு தலைமையக பதவி நிலை அதிகாரிகளினால் வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் சிரேஸ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுகொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டார்.
குறித்த நியமனத்திற்கு முன்னதாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன தியதலாவையிலுள்ள இலங்கை இராணுவ கல்லூரியின் தளபதியாக பணியாற்றியிருந்ததுடன், கொமாண்டோ படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகித்துவருகிறார். இந்நிகழ்வில் 141, 142, 143 மற்றும் 144 வது பிரிகேட் தளபதிகளும் 14 வது படைப் பிரிவின் பதவி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.