11th July 2021 07:01:31 Hours
டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஓகஸ்ட் 8 வரையில் நடைபெறவிருக்கும் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் - 2020 இல் துப்பாக்கிச் சுடும் போட்டிகளின் நடுவராக பணியாற்றுவதற்காக விரைவில் ஜப்பானுக்கு புறப்படவிருக்கும் முதலாவது இலங்கை இராணுவ அதிகாரி லெப்டினன்ட் கேணல் டி.எம்.டி.சி தஸநாயக்கவுக்கு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் சிரேஷ்ட அதிகாரியான அவர் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் பங்குபற்றவுள்ள முதல் இராணுவ அதிகாரியாக வரலாற்றில் இடம்பிடிக்கிறார். இது இலங்கை இராணுவத்திற்கும் நாட்டிற்கும் கிடைக்கப்பெற்ற கௌரவமாகும்.
அவர் 1995 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஒரு துப்பாக்கி சுடும் படைப்பிரிவின் பயிற்றுவிப்பாளர் மற்றும் துப்பாக்கி சுடும் வீரரும் ஆவார். 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இருந்து துப்பாக்கி சுடும் படைப்பிரிவுகளின் பயிற்சியாளராகவும் 2003 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டு மன்றத்தின் தலைவராகவும், இலங்கை இராணுவ சிறு ஆயுதச் சங்கத்தின் செயலாளராகும் பணியாற்றினார்.
மேற்படி அதிகாரி தனது தொழில் வாழ்க்கையில் கொழும்பில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்குபற்றியிருப்பதுடன், இலங்கையின் சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டு மன்றத்தின் தலைமைய ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கிகளை தரப்படுத்தும் அதிகாரியாகவும், 2013 ஆம் ஆண்டில் கைத்துப்பாக்கிச் சுடும் உலக கிண்ண கோட்டிகளின் நடுவர் குழாமிலும், 2015/2016/2017 ஆம் ஆண்டுகளில் கொரியாவில் நடைபெற்ற கைத்துப்பாக்கிச் சுடும் போட்டிகளின் நடுவராகவும், 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் கைதுப்பாக்கிச் சுடும் போட்டிகளின் நடுவராகவும், 20215 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெற்ற கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளுக்கான நடுவர் குழாமின் தலைவர் உள்ளிட்ட பல போட்டி நிகழ்வுகளின் தலைவராக பணியாற்றியுள்ளதுடன், 2003 ஆம் ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேசிய பட்டப்படிப்புக்களையும் நிறைவு செய்துள்ளார்.
அவர் அடிப்படை மார்க்ஸ் மேன் பாடநெறி பயிற்சியாளர் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் தொடர்பான பல பல்வேறுபட்ட பாடநெறிகளிலும் அவர் சிறந்து விளங்கினார்.