Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2021 07:15:42 Hours

யாழ்ப்பாணத்தில் தெங்கு உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 700 க்கும் அதிகதான மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

இராணுவ தளபதியின் “துரு மித்துரு நவ ரட்டக்” வேலைத்திட்டதின் கீழ் யாழ்ப்பாணத்தில் தெங்கு உற்பத்தி திட்டத்தின் ஆரம்ப கட்டமாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சனிக்கிழமை (10) 700 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் யாழ். தீபகற்பத்திலுள்ள மதஸ்தான வளாகங்கள், அரச வளாகங்கள், இராணுவ முகாம்கள், தரிசு நிலங்கள், மற்றும் தனியார் நிலங்கள் ஆகியவற்றில் நாட்டப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய தீபகற்பத்தின் எதிர்கால சந்ததியினரது நலன் கருதி யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் மதகுருவின் ஆசிர்வாரத்துடன் எழுத்தமடுவால் பகுதியில் உள்ள கிறிஸ்துவ பாதிரி தோட்டத்தின் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. மேற்படி தென்னங் கன்றுகள் தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் கௌரவ இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் வண. பீ.ஜே. ஜெபரத்னம் ஆகியோர் விழாவின் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன், யாழ். புனித மரியால் பேராலயத்தின் வண. யூஜின் பிரான்ஸிஸ் அவர்களும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, 522 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக விஜேசிறி, 52 வது படைப்பிரின் கீழ் உள்ள கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள்,அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.