Header

Sri Lanka Army

Defender of the Nation

10th July 2021 18:54:26 Hours

இராணுவத்தினாரால் முன்னெடுக்கப்பட்ட ஹிங்குரங்கொட – ரஜரட்ட பாடசாலையின் சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயிலில்

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மெதிரிகியிவில் நடைபெற்ற 6 வது “கிராமத்துடன் சுமூகமாக சந்திப்பு” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் போது அதிமேதகு ஜனாதிபதியினால் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய இராணுவ தலைமை கள பொறியியலாளரும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் பொறியியலாளர் பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர ஆகியோரின் தலைமையில் ஹிங்குரங்கொட – ரஜரட்ட பாடசாலையின் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைக்கமைய அப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை சீரமைத்தல், நூலக கட்டிடம் , பார்வை மண்டபம் மற்றும் வடிகாலமைப்பு என்பவற்றை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

2 வது கள பொறியியல் படையணியினர் மற்றும் 12 (தொ) பொறியியல் சேவை படையணியினர் ஒன்றிணைந்து தற்பொழுது முன்னெடுத்து வரும் இந்த பணிகள் சில வாரங்களில் நிறைவுபெறவுள்ளன. பொறியியல் பிரிவின் தளபதியவர்கள் அப்பணிகளை நேரடியாக சென்று மேற்பார்வை செய்யதார்.