07th July 2021 20:23:48 Hours
பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) முகமது சாத் கத்தாக் அவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க விடுத்த அழைப்பிற்கமைய கிளிநொச்சி ஏழை மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (29) 150 உலர் உணவு பொதிகளை வழங்கினார்.
கிளிநொச்சி பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீ்ழ் வாழும் பொது மக்களுக்கு உதவும் நிமித்தம் 57 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் ஏற்பாட்டில் தலா 3000 / = மதிப்புள்ள உலர் உணவு பொதிகள் படையினரால் ‘நெலும் பியச’ மண்டபத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இப் பொதிகளில் அரிசி, பருப்பு, தானியங்கள், பால்மா, மசாலா ஆகியவை காணப்பட்டன.
சம்பிரதாய பூர்வமாக 30 பொதிகளை அன்றைய பிரதம அதிதியான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரால் விநியோகிக்கப்பட்டன.