Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2021 18:14:59 Hours

கிரிசுட்டான் கிராம மக்களுக்கு இராணுவ ஒருங்கிணைப்பில் உலர் உணவு பொதிகள் விநியோகம்

கொவிட் 19 தொற்றுநோயிலான பயணக் கட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைத் தணிக்கும் பொருட்டு 2021 ஜூன் மாதம் 23 ம் திகதி கிரிசுட்டான் பாடசாலையில் 653 வது பிரிகேடினரால் அப்பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தனர். வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் பங்குபற்றலில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்த நன்கொடை திட்டத்தை இலங்கையில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக வெளிநாட்டு தொண்டு நிறுவனமான “செண்ட் கொப்பி இன்டர்நேஷனல்” நிதியுதவி செய்தது. 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் 24 கஜபா படையினரால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

கிரிசுட்டான் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அந்தப் பொதிகளைப் பெற்றனர். கொவிட் - 19 சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.