Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2021 23:18:34 Hours

இராணுவ பொறியியல் படையணியினரால் மித்தெனிய மாணவர்களுக்கு மேம்பாலம்

அதிபரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் மித்தெனிய பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆரம்ப பிரிவையும் இமைநிலைப் பிரிவையும் இணைக்கும் வகையில் பிரதான பாதைக்கு குறுக்கே மேம்பாலம் ஒன்றினை 4 வது (தொ) இலங்கை பொறியியலாளர் படையணியின் படையினரின் தொழில்நுட்பம் மற்றும் சிரமத்தில் சில மாதங்களுக்குள் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது.

மித்தெனிய – பனாமுற (பி 286) வீதி போக்குவரத்து செரிசல் மிக்கதொரு பாதை என்பதுடன் பாடசாலை மாணவர்கள் வீதியினை கடக்குகையில் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகி காயம் மற்றும் சில உயிர் இழப்புகளும் இடம்பெற்று இருபதால் 2020 நவம்பர் மாதம் ஜனாதிபதி இப்பகுதிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலையின் இரு பிரிவுகளையும் இணைக்கும் வகையிலான மேம்பாலம் அமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, தலைமை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் பொது பொறியியலாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் துமிந்து ஜயசிங்க ஆகியோருக்கு இந்த மேம்பாலத்தின் கட்டுமானத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

சில நாட்களில் இராணுவ பொறியியலாளர் குறித்த இடத்தை பார்வையிட்டு 4 வது (தொ) பொறியியலாளர் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் கே வரஹேன மற்றும் அவரது படையினரை கட்டுமான பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்தனர். கட்டுமானப் பணிகள் 2020 நவம்பர் மாதம் 18 ம் திகதி கெப்டன் அசித விஜயபண்டார தலைமையில் அவரது தொழில்நுட்ப படையினரால் கட்டுமானம் தொடங்கப்பட்டது.

மிதெனிய பாடசாலை மேம்பாலம் ரூ. 16.4 மில்லியன் பெறுமதியில் 17 மீற்றர் நீளம் மற்றும் 1.5 மீற்றர் அகலம் கொண்டது. இந்த திட்டம் 27 ஜூன் மாதம் 2021 இல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.