04th July 2021 18:30:03 Hours
இன்று காலை (05) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,573 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 56 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள். ஏனைய 1,517 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 249 பேர் கொழும்பு மாவட்டத்தில் இணங்காணப்படுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 221 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 183 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 864 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இன்று காலை (05) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 265,629 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 158,573 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.
இன்று (05) காலை 0600 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,923 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர். ஜூலை மாதம் (03) இலங்கைக்குள் 45 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 20 பெண்களும் 25 ஆண்களும் அடங்குவர்.
இன்று (05) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 77 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,076 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (05) காலை 0600 மணி வரையான காலப்பகுதியில் (கடந்த 24 மணி நேரத்தில்) 25 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 625 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.
இன்று (05) நடைமுறைக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ 710 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இன்று (05) காலை இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தபானே கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.