Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2021 17:20:57 Hours

ஒரே இரவில் நிறுவப்பட்ட இராணுவத்தின் தடுப்பூசி நிலையங்களில் மக்கள் திரல்

30 வயதிற்கு மேற்பட்ட மேல்மாகாண குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக படையினரால் நிறுவப்பட்ட நடமாடும் தேசிய தடுப்பூசி சமூக நிலையங்களில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (5) தனது வேலை பளுக்களுக்கும் மத்தியில் பத்தரமுல்லை தியத உயன தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு விஜயம் செய்தார். இந்த திட்டதை பார்வையிடுவதற்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவு (ASVU) தலைவியும் உடன் சென்றிருந்தார்.

அந்த இடத்தில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளையும் அவதானித்தார். இதனால் அங்கு வரிசையில் நின்ற பொது மக்களுக்கு மிகக் குறைவான தாமதம் அல்லது சிரமமே காணப்பட்டது. தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த பொது மக்கள் மற்றும் கடமையில் இருந்த படையினருடன் சில எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கட்டளைக்கிணங்க பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரையின்படி புதிய நடமாடும் தடுப்பூசி சமூக நிலையங்களை திங்கட்கிழமை (05) முதல் நிறுவ உள்ளதோடு, சினோபார்ம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்கும் தேசிய செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி கொழும்பு இராணுவ வைத்தியசாலை (நாராஹேன்பிட்டி), பத்தரமுல்லை தியத உயன, பானாகொடை இராணுவ விகாரை மற்றும் வெஹரஹேர முதலாவது இலங்கை இராணுவ வைத்திய படையணி தலைமையகம் என்பவற்றில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றுவதற்கான நிலையங்களில் 2021 ஜூலை மாதம் 5ம் திகதி முதல் (திங்கள்) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதல் மாத்திரை தடுப்பூசி ஏற்றும் பணிகளை ஆரம்பிக்கப்படும். இவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வருவோர் மின்சார பட்டியல் அல்லது தொலைபேசி கட்டண ரசீதுகளுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கிராம சேவகரால் வழங்கப்பட்ட உறுதி பத்திரம் அல்லது அடையாள அட்டை அல்லது வாக்காளர் அட்டையை கொண்டு வருதல் அவசியமாகும்.

இதேபோன்ற இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையங்கள் காலி வித்தியாலோக வித்தியாலயம் (காலி மாவட்டம்), மாத்தறை மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயம் (மாத்தறை மாவட்டம்), மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் தியதலாவை (பதுளை மாவட்டம்), அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலை (அனுராதபுரம் மாவட்டம்), காலாட்படை பயிற்சி பாடசாலை மின்னேரிய (பொலன்னறுவை மாவட்டம்), கிளிநொச்சி இராணுவ ஆதார வைத்தியசாலை (கிளிநொச்சி மாவட்டம்) மற்றும் புதுகுடியிருப்பு மத்தியக் கல்லூரி, (முல்லைத்தீவு மாவட்டம்) மற்றும் மன்னார் இலங்கை முதலீட்டுச் சபை கட்டிடம் (மன்னார் மாவட்டம்) ஆகியன ஒரே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் திங்கட்கிழமை (05) தொடக்கம் காலை 0830 மணி முதல் மாலை 04.30 வரை வழங்கப்படும்.

பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மதொல , 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவா செனரத் யாப்பா, வைத்திய சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் நிஷாந்த பதிரன 144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த லியனவடுகே, இராணுவ நோய் நிவாரண மருத்துவம் மற்றும் மனோவைத்திய சேவைகள் பணிப்பாளர் கேணல் சவன் செமகே ஆகியோர் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வரவேற்றனர்.