04th July 2021 12:00:03 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே , 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா ஆகியோர் செவ்வாய்க்கிழமை (29) வெயங்கொடவிலுள்ள 141 வது பிரிகேட் தலைமையகத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டனர்.
வருகை தந்த தளபதிக்கு பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதுடன் பின்னர் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் 14 வது படைப்பிரிவின் தளபதி ஆகியோருக்கு பிரிகேட்டின் பொறுப்புகள் மற்றும் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், தளபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தை குறிக்கும் வகையில் மரக் கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
பின்னர், அவர் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படை முகாமிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், அங்கு மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி 14 வது படைப்பிரிவின் தளபதி ஆகியோருக்கு 8 வது இலங்கை இலேசாயுத காலாட்படை தளபதி லெப்டினன்ட் கேணல் கே.வை பிரியதர்ஷன அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.