04th July 2021 19:00:03 Hours
அண்மையில் நிலை உயர்வு பெற்ற இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரிகேடியர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களை மரியாதை நிமித்தம் தொண்டர் படையணித் தலைமையகத்தில் சந்தித்தனர்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் பரிந்துரைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் குறித்த சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் நுற்றுக் கணக்கான போர்வீரர்களை நினைவு கூறும் தினத்திற்கு இணையாக மேற்படி நிலை உயர்வுகள் வழங்கப்பட்டன.
இந்த சந்திப்பின் போது அந்த புதிய ஒரு நட்சத்திர நிலைக்கு நிலை உயர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட புதிய அதிகாரிகளின் எதிர்கால செயற்பாடுகள் அர்ப்பணிப்புகள், முன்மாதிரியான இராணுவ வாழ்க்கை மற்றும் நாட்டின் நலன்களுக்கான கடின உழைப்பு என்பவற்றுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
பிரிகேடியர் பிரியந்த சிசிர குமார, பிரிகேடியர் சுஷாந்த ஜயமான்ன, பிரிகேடியர் மஹிந்த வீரகோன், பிரிகேடியர் கீர்த்தி விரரத்ன பிரிகேடியர் துசித்த சில்வா, பிரிகேடியர் செஹான் குணவர்தன, பிரிகேடியர் லக்ஷ்மன் ஜயசுந்தர மற்றும் பிரிகேடியர் நளீன் ஜயதிலக்க உள்ளிட்ட புதிதாக நிலை உயர்வு பெற்றவர்களால் தங்களை அலுவலகத்துக்கு அழைப்பித்து கௌரவித்தமைக்காக இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதிக்கு நன்றிகளை தெரிவித்தனர்.