04th July 2021 16:00:03 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே வியாழக்கிழமை (01) தனிமைப்படுத்தல் நிலையங்களை ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.
விஜயத்தின் போது, மீகஸ்தென்ன 661 வது பிரிகேடினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களையும், 613 வது பிரிகேடினால் நிர்வகிக்கப்படும் மாத்தறை தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் 61 வது படைப்பிரிவின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
அதேபோல், கம்புறுபிட்டிய வைத்தியசாலையின் புதிய மகப்பேறு பிரிவின் நிர்மாண பணிகளின் முன்னேற்றத்தையும், மாத்தறையிலுள்ள நில்வலா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலைய்ததையும் மேற்பார்வை செய்தார். அத்தோடு படைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரிகேட் தளபதிகளிடம் மேற்படி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது ஒவ்வொரு படைப்பிரிவுக்குமான தளபதிகள் அவர்களின் கீழ் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் நிலைமைகள் பற்றி தெளிவுபடுத்தியிருந்ததோடு, தளபதி படையினரின் காலோசிதமானதும் அர்ப்பணிப்பானதுமான செயற்பாடுகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு எதிர்காலத்தில் பெறுமதி மிக்க சேவைகளை ஆற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு, 661 வது பிரிகேட் தளபதி கேணல் தீப்தி ஆரியசேன, கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.