04th July 2021 21:36:03 Hours
கிழக்கு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த குழுவொன்றின் செயற்பாடுகளை பொலிஸாருடன் இணைந்து படையினரால் சனிக்கிழமை (03) முறியடிக்கப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு இராணுவத்தினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
22 படைப்பிரிவின் 4 வது இராணுவ விஷேட படையணியினர் 15 வது பீரங்கிப் படையின் ட்ரோன் கெமரா குழுவின் ஒத்துழைப்புடன் மணல் அகழ்வு செய்யப்படும் இடம் கண்டறியப்பட்டதுடன் திருகோணமலை சித்தாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடிபட்டிருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த 3 லொரிகள், 4 கொள்கலன்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி சந்தேக நபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.