04th July 2021 20:36:03 Hours
இராணுவத் தளபதியின் எண்ணக்கருவுக்கு அமைவான 'துரு மிதுரு நவ ரட்டக்' திட்டதின் கீழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு சில நன்கொடையாளர்களினால் வழங்கப்பட்ட நன்கொடையை கொண்டு ஒட்டுச்சுட்டான் பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் வறிய குடும்பங்களுக்கு 3800 தென்னம் நாற்றுகள் (29) விநியோகிக்கப்பட்டன.
64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன, 642 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரசிக பெரேரா ஆகியோர் 64 படைப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சமூக நல திட்டத்தில் இணைந்துகொண்டனர்.
இத்திட்டம் 642 படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் யூ.எல்.சி ஜயசேன அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குரோவ் ரைட் சப்ஸ்டிராக்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு தினேஸ் பெர்ணான்டோ, ட்ரொபிகோ லங்கா தனியார் நிறுவனம் மற்றும் யூரோ சப்ஸ்டிராக்ட்ஸ் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளால் மேற்படி கன்றுகளை விநியோகிப்பதற்கு அவசியமான நன்கொடைகள் வழங்கப்பட்டிருந்தன.