Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2021 11:48:08 Hours

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி தளபதியை சந்திப்பு

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிக் அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வு) மொஹமட் சாத் கத்தக் புதன்கிழமை (30) தனது கிளிநொச்சி விஜயத்தின் ஒரு அங்கமாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உயர் ஸ்தானிகருக்கு வரவேற்பளித்து அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் சமூக நலத் திட்டங்கள் மற்றும் சிவில் – இராணுவ ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள், என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அதனையடுத்து பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் நடைமுறையில் உள்ள சிவில்-இராணுவ உறவுகள் குறித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். மேலும் இதுபோன்ற செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் ஆலோசகர் காலாநிதி அசேல விக்ரமசிங்க சுற்றாடல் மற்றும் மேல் மாகாண சுற்றுச் சூழல் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொஷான் ராஜபக்‌ஷ, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிவின் பிரிகேடியர் தீபால் புஸ்ஸெல்ல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் நினைவுச் சின்னங்களும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.