Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2021 13:43:57 Hours

ஹபரன விவகாரத்துடன் தொடர்புடைய சிரேஸ்ட இராணுவ அதிகாரிக்கு நீதிமன்றத்தினால் பிணை

(ஊடக அறிக்கை)

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (25) ஏற்பட்ட முறுகல் நிலைமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக 21 வது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க (ஜூலை 01) அன்று காலை கெகிராவை நீதிவான் நீதிமன்றததில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் மேற்படி சிரேஸ்ட அதிகாரியால் 2021 ஜூன் 25 ஹபரன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், இதுவரையில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்படாதிருந்ததுடன், இன்று (ஜூலை 01) அதிகாரி தாமாகே பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்ததுடன், இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் பொலிஸார் குறித்த அதிகாரியை கைது செய்ய தவறிவிட்டனர் என்ற எதிர்மறையான பிரசாரங்கள் சில ஊடங்களில் முன்வைக்கப்பட்டதுடன் அவற்றுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர் எதிர்பார்த்துள்ளார். அத்தோடு, இந்த வழக்கின் மீள் விசாரணைகள் 2022 பெப்ரவரி 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவருடன் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் 25 ஆம் திகதி ஏற்பட்ட முறுகல் தொடர்பில் அறியக்கிடைத்தவுடன் உடனடியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா 2021 ஜூன் 26 ஆம் திகதி மேற்படி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்பிப்பதற்கான சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய குழுவையும் நியமித்திருந்தார். இது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவ பொலிஸாரினாலும் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.