29th June 2021 20:00:22 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கிளிநொச்சி முன்னரங்க பராமரிப்பு பிரதேச தலைமையகத்தின் 14 வது தளபதியாக பிரிகேடியர் நிலம் ஹேரத் செவ்வாய்கிழமை (22) கடமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தளபதி முன்னரங்க பராமரிப்பு பிரதேச தலைமையகத்தின் அலுவலகத்திற்கு செல்லும் முன் பதவி நிலை அதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டதுடன் பின்னர் பௌத்த மத அனுஷ்டான ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தனது புதிய அலுவலகத்தை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் நிலம் ஹேரத் கொஸ்கம வழங்கல் கட்டளை தலைமையகத்தில் பிரிகேடியர் வழங்கல் அதிகாரியாக பணியாற்றினார். மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன அவர்கள் 55 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டமையை அடுத்து இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தலைமையக தளபதிக்கு தங்களின் வாழ்துக்களை தெரிவித்தனர்.