30th June 2021 10:00:53 Hours
திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவ வழங்கல் பாடசாலைக்கு பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம். ஷபியுல் பாரி, அவர்கள் இராணுவ வழங்கல் பாடசாலையில் வழங்கல் பாடநெறி இல 07 இல் பயிச்சி பெறும் பங்களாதேஷ் மாணவ அதிகாரிகளின் நலன்புரி விடயங்கள் தொடர்பான நிலையை கண்காணிக்கும் நோக்கில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர அவர்கள் பாதுகாப்பு ஆலோசகரை வரவேற்றதோடு, மாணவ அதிகாரிகளுடன் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உரையாடுவதற்கு முன்பாக, அவருக்கு இராணுவ வழங்கல் பாடசாலையின் பயிற்சி தொகுதிகள் மற்றும் வசதிகள் குறித்து சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது.
அதனையடுத்து வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு தலைமை பயிற்றுவிப்பாளர் கேணல் சஞ்சீவ ரங்கிக அவர்களால் பயிற்சி முறைகள் தொடர்பான விரிவான விளக்கம் காட்சியமைப்புக்களுடன் வழங்கப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மீண்டும் ஒப்புதல் அளிப்பதற்காக மேற்கொண்ட குறித்த பயணத்தை குறிக்கும் வகையில் பாதுகாப்பு ஆலோசகரால் மாங்கன்று ஒன்றும் நடப்பட்டது.
அவர், அங்கிருந்து புறப்படும் முன்பாக இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அவர்களுக்கு இடையே நினைவுச் சின்னங்கள் பாராட்டுக்கான அடையாளங்களாக பரிமாற்றப்பட்டன. அதன் பின்னர் இடம்பெற்ற மதிய விருந்துபசாரத்தில் பணியாளர்கள், வெளிநாட்டு மாணவர் அதிகாரிகள் மற்றும் இராணுவ வழங்கல் பாடநெறி இல 07 இன் மாணவ அதிகாரிகளும் பங்கேற்றனர்.