01st July 2021 10:02:09 Hours
இராணுவ புலனய்வு பிரிவிவிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மற்றும் 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேடின் 24 வது இலங்கை சிங்கப் படையினரால் செவ்வாய்க்கிழமை (29) தனமல்வில அம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த இரண்டு கஞ்சா செய்கைகள் அழிக்கப்பட்டன.
சுமார் 40 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் ரகசியமான முறையில் பயிரிடப்பட்ட 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா செய்கையை பொலிஸாரும் முன்னிலையில் படையினரால் அழிக்கப்படடன.
இது தொடர்பாக தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன், போதைப்பொருளை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான அரசாங்கத் திட்டத்துக்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய படையினர் பொலிஸாருக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சட்ட விரோத செய்கையை உடனடியாக அழிக்குமாற அறிவுரை வழங்கியிருந்தமைக்கு அமைவாக 12 வது படைப்பிரிவு மற்றும் 121 பிரிகேட் தளபதி ஆகியோரின் கட்டளைகளுக்கு அமைவாக படையினரால் மேற்படி செய்கை அழிக்கபட்டது. 121 வது பிரிகேட் தளபதியினால் மேற்படி நடவடிக்கை நேரடியாக மேற்பார்வை செய்யப்பட்டது.