Header

Sri Lanka Army

Defender of the Nation

29th June 2021 22:45:41 Hours

தளபதியின் வழிகாட்டலில் கட்டுபெத்த இலங்கை மின்சார இயந்திர பொறியியல் படையணியால் நாட்டுக்கு பல மில்லியன் சேமிப்பு

இலங்கை இராணுவ இலங்கை மின்சார இயந்திர பொறியியல் படையணி இராணுவ மற்றும் கடற்படை வாகனங்களை பழுதுபார்க்கும் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளமையினால் இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைவாக பெருமளவான அந்நிய செலவணியை சேமிக்க முடிந்துள்ளது . மேற்படி இராணுவ வாகனங்கள் உத்தியோகபூர்வமாக இராணுவ தளபதியிடம் இன்று (29) காலை ஒப்படைக்கப்பட்டன.

சில மாதங்களுக்கு முன்பு, ஜெனரல் சவேந்திர சில்வா, பயன்பாட்டிற்கு அவசியமான வாகனங்களுக்கான பற்றாக்குறை தொடர்பில் அறிந்துகொண்டதுடன், அதற்காக செலவாகும் அந்நிய செலாவணி தொடர்பில் கவனமெடுத்திருந்த நிலையில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறிமுறை படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது பாவனையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் பயன்டுத்த முடியாத நிலையி்ல் காணப்படுகின்ற வாகனங்களை அவசியத்துக்கு ஏற்றவகையில் புதுபிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். நாடளாவிய ரீதியில் நிலைக் கொண்டுள்ள பல்வேறு இராணுவ அமைப்புகளில் தனித்துவமான தரங்கள், வர்ணம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் வகையில் பாவனையற்று காணப்பட்ட வாகனங்கள் இயக்கக்கூடிய வகையில் திருத்தப்பட்டுள்ளன.

15-25 வருடங்களுக்கு மேலாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர சுழற்சி கொண்ட நேர்த்தியற்ற வீதிகளில் பயணிக்க கூடிய திறன் கொண்ட லேண்ட் ரோவர்ஸ் வகை வாகனங்கள் கட்டு பெத்தை இலங்கை இராணுவ மின்சார இயந்திர பொறியியல் படையணியின் வேலைத் தளத்திற்கு பழுது பார்பதற்காக கொண்டுவரப்பட்டன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இலங்கை இராணுவ மின்சார இயந்திர பொறியியல் படையணி வேலைத் தளத்தில் இவ்வாறாக கைவிடப்பட்ட இலகுரக வாகனங்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் (எஸ்யூவி), இரட்டை வண்டிகள், ஜீப் வண்டிகள் உள்ளடங்கலாக சுமார் 50 வாகனங்கள், வீதிகளுக்கு தகுதியுடையவையாக இராணுவம் மற்றும் நாட்டின் நலன்களுக்காக மாதம் 10 வாகனங்கள் என பழுதுபார்த்து, புதுப்பிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டன.

இன்று காலை இராணுவ தலைமையக வளாகத்தில் பழுதுபார்க்கப்பட்ட அந்த வாகனங்களை ஆய்வு செய்த இராணுவத் தளபதி இலங்கை இராணுவ மின்சார இயந்திர பொறியியல் படையணியின் உரிய காலத்தில் சிறப்பாக செயற்பட்டமையை பாராட்டினார். மேலும் நாட்டின் அந்நிய செலாவணியைச் சேமிக்கும் வகையிலான முயற்சிகளில் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் பிற சேவைப் பகுதிகளிலும் பயன்படுத்த கூடிய வகையிலான இன்னும் சில வாகனங்கள் மற்றும் உபகரணங்களை பழுது பார்க்குமாறும் அங்கிருந்த சிரேஸ்ட இலங்கை இராணுவ மின்சார இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனால் உதிரிபாகங்கள் மற்றும் பிற செலவுகள் மீதப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாரிய அளவிலான அந்நிய செலாவணியைச் சேமிக்கும் வகையில் கட்டுபெத்தை,உடவளவ, அநுராதபுரம், கிளிநொச்சி மற்றும் யாழ்பாணம் உள்ளடங்கலான அனைத்து மாகாண இலங்கை இராணுவ மின்சார இயந்திர பொறியியல் படையணியின் வேலைத் தளங்களில் மிதி வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், இலகுரக வாகனங்கள், வேன்கள், லாரிகள், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இராணுவ பயன்பாட்டிற்காக பழுதுபார்த்து வர்ணம் பூசப்படுகின்றன.

இராணுவ மின்சார இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் இந்து சமராகோன் மற்றும் கட்டுபெத்தை இலங்கை இராணுவ மின்சார இயந்திர பொறியியல் படையணியின் வேலைத் தள தளபதி கேணல் அஜித் ஹெட்டிகே மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் இன்று காலை இராணுவ தலைமையகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.