Header

Sri Lanka Army

Defender of the Nation

28th June 2021 05:30:45 Hours

2,123 பேர் தனிமைப்படுத்தலினை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பல்

இன்று காலை (29) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,890 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 40 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் ஆவர். ஏனைய 1,850 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 337 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன் களுத்துறை மாவட்டத்தில் 268 தொற்றாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 198 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 1,047 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று காலை (29) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 255,507 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 149,009 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

இன்று (29) காலை 0600 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,251 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர்.

இன்று (29) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,317 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (29) காலை 0600 மணி வரையான காலப்பகுதியில் (கடந்த 24 மணி நேரத்தில்) 24 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 2,123 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.

ஜூன் மாதம் (27) இலங்கைக்குள் 41 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 17 பெண்களும் 24 ஆண்களும் அடங்குவர்.

இன்று (29) காலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவின் சிங்கப்புர கிராம சேவையாளர் பிரிவின் நல்லிணக்க வீ்ட்டுத்திட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகள், கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவில் கல்பொரல்ல நூறு தோட்டம் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நுவரெலிய மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவில் களுந்தமத, ஹபுகஸ்தலாவ , வீரபுர மற்றும் கொரக்கஓயா கீழ் கிராம சேவையாளர் பிரிவும் கம்பஹா மாவட்டத்தின் பியகம பொலிஸ் பிரிவின் யடியேன கிராம சேவைப் பிரிவும் பொல்ஹேன வீதி, லேக்வீச் வீதி குளத்திற்கு திரும்பும் வரையிலான முதலீட்டுச் சபை வீதி , மீகாவத்தை பொலிஸ் பிரிவின் சியலாம்பேவத்தை கிராம சேவையாளர் பிரிவின் உபுல் வசந்த மாவத்தை, தேவால வீதி, ஆரியதாச விதானகே வீதி, ஆரியதாச விதான வீதி முடிவு வரையான பகுதி மற்றும் சியலாம்பேவத்தை கந்துபொட வீதியும் காலி மாவட்டத்தில் இந்துறுவ பொலிஸ் பிரிவின் கோணகல கிராம சேவையாளர் பிரிவில் பொல்குடு கம , அம்பாறை மாவட்டத்தில் சமான்துறை பொலிஸ் பிரிவின் புதிய வலத்தப்பிட்டிய கிராமம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வழைச்சேனை பொலிஸ் பிரிவின் மீரவோதி கிழக்கு, மீரவோதி மேற்கு மற்றும் மென்ஷகோலாய் பதுரிய ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் சேவையாளர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன.