28th June 2021 16:08:45 Hours
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகம் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி கஷ்ட பிரதேசங்களின் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக வெவ்வேறு பனை தயாரிப்புகளை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கின்றது.
பாரம்பரிய பனை தயாரிப்புகளுக்கு சிறந்த சந்தையை வழங்குவதற்காக 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க, 661 வது பிரிகேட் தளபதி மற்றும் அவரது படையினருடன் சேர்ந்து பனை தயாரிப்புகள் குறித்து அறிவூட்டும் திட்டங்களையும் தொடங்கியுள்ளது. அதன்படி, 47 சிவிலியன்களுக்கு புதிய பனை கைவினைப் பொருட்கள் மற்றும் புதுமையான உணவுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு பயிற்சி வகுப்பை மேற்கொண்டு வருகின்றனர்,
இதேபோல், 24 வது விஜயபாகு காலாட் படை (வி.ஐ.ஆர்) மற்றும் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படை (எம்.ஐ.ஆர்) படையினர் 4 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 25 கோழி குஞ்சுகளை விநியோகித்தனர். இதன் ஊடாக ஆகஸ்ட் 2021பிறகு நாள் ஒன்றுக்கு சுமார் ரூபா 150 - 200 மேலதிக வருமானம் ஈட்ட முடியும்.
மேலும், 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படை (எஸ்.எல்.எல்.ஐ) அதிக அளவு சேதன விரயங்களைக் குறைப்பதற்கும், படையணி பண்ணையில் பயிரிடப்படும் பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வதற்கும் ஒரு பசளை உற்பத்தி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், அந்த பகுதியில் உள்ள உள்ளூர் விவசாயிகளிடையே இரசாயன உரங்களுக்கு பதிலாக சேதன பசளை பாவணையை ஊக்குவிப்பதற்காக ஆகும். மேற்கூறிய திட்டங்களுக்கு மேலதிகமாக, 20 (தொ) விஜயபாகு படையினர் திரு பீ சுப்ரமணியம் முறுக்கு மற்றும் பிற சுவையான சிற்றுண்டிகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வழங்கியதுடன் அவரது உற்பத்திகளை 66 வது படைப்பிரிவு பகுதியில் உள்ள அனைத்து சிற்றுண்டிசாலைகள் மற்றும் இராணுவ நலணோம்புக் கடைகளில் அதனை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொடுத்துளளனர்.
662 வது பிரிகேட்டின் முன்னாள் தளபதியின் வேண்டுகோளின் பேரில், கொழும்பு கோட்டை ரோட்டரி கிளப் செருக்கன் மற்றும் சீதாகுடியிருப்பு கிராமங்களில் வசிக்கும் 56 குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையிலான இரண்டு நீர் தொட்டிகளின் நிர்மாணி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியது. சில நாட்களுக்கு முன்பு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க மற்றும் 66 வது படைப்பிரிவின் தளபதி ஆகியோரினால் பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது. இத்திட்டமானது 20 வது இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஐ.கே.ஏ.குமாராவின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் அவரது படையினரால் கட்டுமானப் பணிகளுக்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் திறமையான மனிதவளத்தை வழங்கியிருந்தனர்.
மேலும், 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் (எஸ்.எல்.என்.ஜி) படையினர் 100 கோழி குஞ்சுகளையும், புதிதாக தயாரிக்கப்பட்ட 4 கூண்டுகளையும் 4 தமிழ் குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 கோழி குஞ்சுகளுடன் விநியோகித்தனர். மேலும் 250 சுண்டக்காய் கன்றுகளை தலா 25 கன்றுக்கள் வீதம் 10 குடும்பங்களுக்கு விநியோகித்தனர்.