28th June 2021 14:08:45 Hours
பிராந்தியத்தின் சேதன பசளை பாவனையினை ஊக்குவிக்கும் அரச கொள்கையை அமல்படுத்தும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 66 வது படைப்பிரிவின் 661 வது பிரிகேட் தலைமையகம், 662 பிரிகேட் தலைமையகம், 663 பிரிகேட் தலைமையகம் ஆகியவற்றின் கட்டளை அலகுகலான 24 வது மற்றும் 20 வது விஜயபாகு காலாட் படை (வி.ஐ.ஆர்), 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படை (எஸ்.எல்.எல்.ஐ), 11 வது (தொ) கஜபா படை, 5 வது (தொ) இயந்திரவியல் காலாட்படை மற்றும் 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி என்பன சேதன பசளை உற்பத்தி திட்டங்களை தொடங்கியுள்ளன.
கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டங்கள் 66 வது படைப்பிரிவு தளபதி, 661 வது பிரிகேட் தளபதி கேணல் தீப்தா ஆரியசேன, 662 வது பிரிகேட் தளபதி கேணல் சமிந்த லியனகே மற்றும் 663 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுபாசன லியனகம ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையில் நடந்து வருகின்றன.
இந்த திட்டமானது சேதன பசளை பவனையின் நன்மைகள் குறித்த சமூக விழிப்புணர்வை மேம்படுத்த எதிர்பார்க்கிறது அத்துடன் உள்ளூர் விவசாயிகளுக்கு தங்கள் சொந்தமாக சேதன பசளை உற்பத்தியினை செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்க இராணுவம் எதிர்பார்க்கிறது.