Header

Sri Lanka Army

Defender of the Nation

28th June 2021 19:47:55 Hours

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் கொத்தலாவலை பல்கலைக்கழகத்தின் புதிய ரெஜிமென்ட் சாஜன்ட் மேஜர்களுக்கு இராணுவத் தளபதி அறிவுரை

இலங்கை இராணுவ கலவியற் கல்லூரி மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜர்கள் (ஆர்.எஸ்.எம்) திங்கட்கிழமை (28) தங்களது புதிய நியமனங்கள் குறித்த வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் வாழ்த்துக்களைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பு கிடைத்தது. இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவுடன் குறித்த ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜர்கள் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, அவர்களை சந்தித்தனர்.

இந்த இரண்டு நியமனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை கவசப் வாகனப் படையணியை சேர்ந்த அதிகாரவாணையற்ற அதிகாரி 1 W.P.D.R வீரசிங்க மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 W.R.I விஜேசுந்தர இருவரும் புதிய நியமனங்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் இரு இராணுவ நிறுவனங்களிலும் வழங்கல் நிர்வாகப் செயற்பாடுகளுக்கு உயர்வாக உதவ வேண்டும் என்றும் விரும்பினர். ஒரு ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜராக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இடையேயான இணைப்பாளராக செயல்படுதல் வேண்டும் எனவும் அத்தகைய நியமனங்களுடன் தொடர்புடைய பொறுப்புகளையும் அவர் அவர்களுக்கு நினைவுபடுத்தினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் முப்படை சேவைகளுக்கான தளமாக இருப்பதால் எதிர்காலத்தின் இராணுவத் தலைவராக கூடிய ஒரு அதிகாரியை உருவாக்குவதில் பெரும் பங்குண்டு. பயிலிளவல் அதிகாரியாக பயிற்சி பாடசாலைகளில் துல்லியமான வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சிகள் மற்றும் வெவ்வேறு அணிவகுப்புகளுக்கு ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜர்களால் நாங்கள் எவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டோம் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, இது உங்களுக்கு மட்டுமே உரிய ஒரு தரம். எனவே இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிலும் தலைமைத்துவ பயிற்சியினைப் பெறும் எங்கள் வளந்துவரும் அதிகாரிகளிடம் சிறந்த மூலோபாய நடைமுறைகளைப் பின்பற்றுங்கள் ”என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா உரையாடலின் போது கருத்து தெரிவித்தார்.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் ஒப்புதலுடன் இந்த பொறுப்பான நியமனங்களுக்கு பணியாளர் நிர்வாக பணிப்பகம் பரிந்துரைத்தது.

சுருக்கமான சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி அவர்களின் புதிய பொறுப்புகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இராணுவத் தலைமையகத்தில் நடந்த சுருக்கமான சந்திப்பில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் இராணுவத் தலைமையக ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜர் அதிகாரவாணையற்ற அதிகாரி 1, பி.ஜி.எம்.எஸ்.ஜெயவீர அவர்களும் கலந்துக் கொண்டனர்.