27th June 2021 23:23:08 Hours
53 வது படைப்பிரிவின் நடமாடும் சேவை பிரிகேட் படையினரால் 2021 ஜூன் 19 அன்று வேலங்குளம், வவுனியா, இனாமலுவ மற்றும் ஹபரன ஆகிய பகுதிகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு 30 உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
தம்புள்ளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளான வைத்தியர் கல்பணி திஸாநாயக்க மற்றும் வைத்தியர் ஹிமாலி சமரவீர ஆகியோரின் நிதி உதவியில் மிகவும் தேவையுள்ள குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
53 படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் அறிவுரைக்கமைய நடமாடும் சேவைப் பிரிகேட்டின் தளபதி கேணல் சுபாத் சஞ்சீவ அவர்களின் மேற்பார்வையில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.