27th June 2021 23:25:08 Hours
51 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் 512 பிரிகேட் படையினரால் யாழ்ப்பாணம் புனித அடைக்கல மாதா தேவாலய வளாகத்தில் இருந்த கழிவுகள், காகிதங்கள், குப்பைகள் உட்பட சுற்றூச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் காணப்பட்ட பொருட்களை அகற்றும் சிரமதான பணிகளை வௌ்ளிக்கிழமை (25) முன்னெடுத்தனர்.
மத நல்லிணக்கம் மற்றும் நட்புறவை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்த இத்திட்டம் யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் 51 வது படைப்பிரிவு தளபதி தீபால் புஸ்ஸெல்ல ஆகியோரின் ஆசீர்வாத்துடன் முன்னெடுக்கப்பட்டது.
51 வது படைப்பிரிவு தளபதி தீபால் புஸ்ஸெல்ல மற்றும் 512 பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக ராஜபக்ஷ ஆகியோரால் தூய்மையாக்கள் பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டன.