27th June 2021 23:54:11 Hours
கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக கஸ்ட பிரதேச விகாரைகள் / மடங்களின் பௌத்த பிக்குகள் மற்றும் துறவிகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைத் தணிக்கும் நோக்கத்துடன், பொசன் போய (24) தினத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவு படையினர் கனடாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவரின் நன்கொடையில் குறித்த ஸ்தானங்களிக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உலர் உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
65 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜே டி யு டி குமாராவின் ஒருங்கிணைப்பில் கனடாவில் வசிக்கும் திரு மோரிஸ் சோண்டர்ஸ் ஜெயதிலக திட்டத்திற்காக நிதியுதவியளித்திருந்தார்..
அந்த நிவாரணப் பொதிகள் பிரப்பன்மடு ஸ்ரீ பன்னானந்தா விகாரை, செலலிஹினிகம ஸ்ரீ சதாசிறி மகா விகாரை, செலலிஹினிகம ஸ்ரீ சுதஹர்ம மெஹேனி ஆரான்மை, நந்திமித்திரகம சுஜாதாராம மெஹேனி ஆரான்மை, எட்டம்பகஸ்கட ரஜமகா விகாரை, கோகெலிய போதிமலு விகாரை என்பவற்றுக்கு சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் விநியோகிக்கப்பட்டதன.
குறித்த இடங்களின் சிரமங்கள் குறித்து உன்னிப்பாகக் அவதானித்த 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திஸாநாயக்கவின் பங்கேற்புடன் சாத்தியமான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்க முடிவு செய்யப்ட்டன.