Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2021 23:09:41 Hours

பல்கலைக்கழக தடுப்பூசி ஏற்றும் பணிகளை 11 வது படைப் பிரிவினரால் பொறுப்பேற்பு

பேராதனை பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா அவர்களின் மேற்பார்வையில், 11 வது படைப்பிரிவு தளபதி மற்றும் கண்டி மாவட்டத்தின் கொவிட் - 19 தடுப்புக்கான செயற்குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களின் ஏற்பாட்டிலும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தளபதியுமாக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமையவும் பல்கலைக்கழக உப வேந்தர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாகவும் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் வெள்ளி்கிழமை (25) முன்னெடுக்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் 2500 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதுடன், பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்பிஎச். பராக்கிரம கருணாரத்ன, துணை வேந்தர் , மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் ஆகியோருடன் படைப்பிரிவு தளபதி தடுப்பூசி ஏற்றுவதற்கான தளங்களை மேற்பார்வை செய்த பின்னர் அது தொடர்பிலான எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டிற்கு இராணுவ வீரர்கள் குழு உதவுவது தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் தளபதி கலந்தாலோசித்தனர்.