Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2021 23:35:53 Hours

12 வது படைப்பிரிவினரால் கதிர்காமம் பகுதி குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் விநியோகம்

3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் கதிர்காமம் ருஹூனு மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே அவர்களின் நிதி உதவியுடன் கதிர்காமத்தின் வறிய குடும்பங்களுக்கு 5000 நிவாரண பொதிகளை விநியோகிக்கும் பணிகளை குறித்த பகுதிகளின் கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக அவர்களின் மேற்பார்வையில் ஜூன் மாதம் 24 – 25 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இத்திட்டத்தை 122 பிரிகேட் தளபதி ஜானக பல்லேகும்புர மேற்பார்வை செய்தார்.

புனித பொசன் போயா தினத்தில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டமானது கதிர்காமம் நகரை அண்மித்து காணப்படும் தெடகமுவ, செல்ல கதிர்காமம், கரவில மற்றும் கடுகஸ்தோட்டை ஆகிய பகுதிகளில் கொவிட் – 19 அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.