Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2021 10:52:58 Hours

1 வது இலங்கை பொது சேவை படையினரால் பனலுவ பண்ணையில் மர நடுகை திட்டம்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் “துரு மித்துரு நவ ரட்டக்” என்ற திட்டத்தின் கீழ் முதலாவது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சிஎஸ் தெமுனி அவர்களின் தலைமையில் அண்மையில் பனலுவ பண்ணை வளாகத்தில் இளுப்பை மரக் கன்றுகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்படி சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி ஹங்வெல்ல விவசாய சேவைகள் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து முதலாவது இலங்கை பொதுச் சேவை படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.