Header

Sri Lanka Army

Defender of the Nation

01st July 2021 09:48:53 Hours

யாழ். தலைமையகத்துக்கு 25 வருடங்கள் பூர்த்தி

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் தனது 25 வது ஆண்டு நிறைவு நிகழ்வு 20 ஜூன் 2021 அன்று பெருமையுடன் கொண்டாடியமை மற்றுமொரு மைல்கல்லாகும். யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய தொடர்ச்சியாக ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன.

வௌ்ளி விழா நிகழ்வுகளின் ஆரம்ப கட்டமான 9 பௌத்த பிக்குகளை ஊர்வலமாக பௌத்த கொடிகளுடன் தலைமையகத்திற்கு அழைப்பித்து அவர்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன் நடனக் கலைஞர்கள் மற்றும் வாத்திய இசைக் கலைஞர்கள் நிகழ்வினை வண்ணமயமாக்கினர். யாழ் குடாநாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குறித்த அன்னதானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து தலைமையகத்தின் கீழ் பணியாற்றி போரில் உயிர் நீத்த படை வீரர்களுக்கான பலாலி நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், 2021 ஜூன் 19 ம் திகதி யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பிரியந்த பெரேரா மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்நிகழ்வு முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றதுடன் இறுதி கட்டத்தை அடைந்தது.

இராணுவ மரபுகளுக்கு இணங்க, யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் ஆண்டுவிழா நிகழ்வுக்கு வருகை தந்ததையடுத்து 17 வது கெமுனு ஹேவா படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இறுதியில் புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் தளபதி கலந்துகொண்டார்.

மேலும், யாழ் தளபதியின் வருகையின் நினைவம்சமாக தலைமையக வளாகத்தில் ஒரு மா மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டதோடு, இந்நிகழ்ச்சியில் 51, 52 மற்றும் 55 படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேடியர் பொதுப் பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து தளபதியின் உரைக்கு முன்பாக இடம்பெற்ற விருந்துபசாரத்தில் சகலரும் கலந்துகொண்டதுடன், படையினரின் அர்பணிப்புகளை பாராட்டிய அவர் யாழ்ப்பாண மக்களின் நலன்களுக்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.