25th June 2021 07:00:40 Hours
மாத்தறை ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாபாலன விவசாய பீடம் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பார்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்த கூடிய வகையிலான தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றியமைக்கபட்டுள்ளது.
சுகாதார துறையின் வழிகாட்டல்களுக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைபிரிவு தளபதி தம்மி ஹேவகே அவர்களின் அறிவுரைக்கமைய பல்கலைக்கழக பீடம் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றியமைக்கப்பட்டது.
பதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய நாட்டிற்குள் நெருங்கிய தொடர்பாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களை பராமரிப்பதற்கான கட்டில் வசதிகளை மேம்படுத்துவதற்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களை மேம்படுத்துவதும் அவசியம் என்பதோடு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் குறித்த தனிமைப்படுத்தல் நிறுவனத்தை உடனடியாக கட்டமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
12 வது இலங்கை சிங்கப் படை, 3 வது (தொ) கெமுனு ஹேவா படையினர், சுகாதார அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகளிடம் ஆலோசித்து தேவைகளை அறிந்துகொண்டதன் பின்னர் நிலைய கட்டமைப்பு பணிகளை வியாழக்கிழமை (24) ஆரம்பித்தனர்.
613 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு பணிகள் நிறைவடையும் வரையில் மேற்பார்வை செய்தார்.