26th June 2021 11:57:47 Hours
இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி வன்னி பாதுகாப்புப் படையினரின் மற்றொரு சிவில் சமூக சார் திட்டத்தின் கீழ் வீடற்ற திரு. ஏ. ரவீந்திர ரணசிங்க அவர்களுக்கான புதிய வீடு கட்டுவதற்கான அடிக்கல் வெள்ளிக்கிழமை (11) ) நாட்டப்பட்டது.
1, 9 மற்றும் 11 வயதில் மூன்று பிள்ளைகளுடனான பயனாளி சரியான தங்குமிடம் இல்லாது நிறைய கஷ்டங்களை அனுபவித்தமை படையினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டமையை அடுத்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
212 வது பிரிகேட் தளபதியின் வேண்டுகோளின் பேரில் ஹோமாகம பகுதியில் வசிக்கும் நன்கொடையாளர் திரு ரசித் மனதுங்க, அவர்களது முழு வீட்டிற்குமான மூலப்பொருள் நன்கொடையுடன் 5 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் படையினரின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி வீட்டைக் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகின்றனர்.
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் ஆசீர்வாதத்துடன் 21 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 212 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் திட்டம் முனெடுக்கப்படுகின்றது.
21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொகான் ரத்நாயக்க, 212 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் ரொஹான் ராஜபக்ஷ, சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்குப்பற்றினர். இந் நிகழ்ச்சியில் பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில கிராம மக்களும் இணைந்துக் கொண்டனர்.