25th June 2021 08:00:20 Hours
54 வது படைப்பிரிவின் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 8 வது விஜயபாகு காலட் படையின் படையினாரால் 2021 ஜூன் 23 ம் திகதி மன்னார் சிலாவத்துறை, சவரிப்பும் பிரதேசத்தில் நல்லிரவு வேளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடத்தல் மஞ்சள் 753 கிலோ பொதிகள் மீட்கப்பட்டன.
இந்தியாவிலிருந்து கடத்தி கொண்டவரப்பட்டதென சந்தேகிக்கப்படும் மேற்படி மஞ்சள் தொகையின் பெறுமதி சுமார் 4.518 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மீட்கப்பட்ட மஞ்சள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதியின் மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஆகியோரின் ஆலோசணைக்கமைய 54 படைப்பிரிவினர் மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத கடத்தல் செயற்பாடுகளை தடுக்கும் செயற்பாட்டில் மிகத் தீவிரமான ஈடுபட்டு வருவதோடு, இந்தியாவிலிருந்து கேரள கஞ்சா, மஞ்சள் ஆகிய பொருட்கள் கடத்தபடுகின்றமையை மட்டுப்படுத்தி வருகின்றனர்.
அதற்கமை கடந்த வருடம் ஜூன் மாதம் தற்போதைய 54 வது படைப்பிரிவு தளபதியின் கட்டளைக்கமைய 241 மில்லியனுக்கு மேற்பட்ட சந்தைப் பெறுமதியிலான கேரள கஞ்சா, மஞ்சள் மற்றும் சட்டவிரோத மணல் கடத்தல் மன்னார் மாவட்டத்தில் படையினரின் விரைவு நடவடிக்கை ஊடாக கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.