24th June 2021 10:20:06 Hours
இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய, நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேட் படையினரால் கல்முனை பெரிய நீலாவணை கிராம சேவகர் பிரிவில் உள்ள குடும்பமொன்றுக்கு புதிய வீட்டை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மனிநேயம் கொண்டவர்களின் நிதி உதவியுடன் நிர்மாண பணிகளுக்கான மனித வளம், தொழில்நுட்ப நிபுணத்துவ வசதிகளை 241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக விமலரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் 3 வது விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி மேஜர் சாந்த வீரகோன் அவர்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
இத்திட்டம் சில வாரங்களுக்குள் நிறைவு செய்யப்படும்.